நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த சம்பவம்

7

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் சக பொலிஸ் உத்தியோகத்தரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் தற்போது விசாரணை மட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மதுபோதையில் இருந்த பொலிஸ் அதிகாரி, விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை கட்டி அணைத்து , ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இதன்போது உறங்கிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சத்தம் போட்டு ஓடி உள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட அவர் இந்த விடயத்தினை பொறுப்பதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பில் காங்கேசன் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.