இன்றைய ராசிபலன் – 28/04/2022, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.

14

இன்றைய பஞ்சாங்கம்

28-04-2022, சித்திரை 15, வியாழக்கிழமை, திரியோதசி திதி இரவு 12.27 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 05.40 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிபலன் – 28.04.2022

மேஷம்

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக உள்ள நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

சிம்மம்

இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.

கன்னி

இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியான தூர பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும்.

தனுசு

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். கடன்கள் குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும்.

மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக உள்ள தடைகள் விலகி எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்

Comments are closed.