கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: இருவர் பலி

11

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) இரவு வேளையில் பனங்காடு பாலத்தின் அருகே இடம்பெற்ற விபத்தின்போதே இத்துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்தில் விநாயகபுரத்தை சேர்ந்த இருவர் பலியானதுடன் பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீதியின் அருகே இருந்த தூண் ஒன்றில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.