அராலி பாலத்தடியில் விபத்து: முதியவரொருவர் வைத்தியசாலையில்

10

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பட்டா ரக வாகனம் ஒன்று காரைநகரில் இருந்து யாழ். நோக்கி அராலி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த வாகனத்திற்கு பின்னால் முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது வந்துள்ளார்.

இதன்போது வீதிக்கு குறுக்கே மாடு சென்றதால் பட்டா ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.