அடுத்து ஒரு கிராமத்து கெட்அப்பில் நடிக்கிறாரா ஆர்யா ? வெளியான அப்டேட் இதோ !!

7

2013ஆம் ஆண்டு சசிகுமாரின் குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா.

இதன்பிறகு கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா, தொடர்ந்து விஷாலை வைத்து ‘மருது’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

கார்த்தி-முத்தையா கூட்டணியில் அடுத்ததாக விருமன் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் – அதிதி நடிக்கவுள்ளார்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘விருமண்’ படத்தை தயாரித்துள்ளது. மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, முத்தையா இயக்கும் அனைத்துப் படங்களிலும் கிராமம் சார்ந்த கதைக்களம் இடம்பெறும். அந்த வகையில் முத்தையா இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த சூடான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தை முத்தையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மற்ற முத்தையா படங்களைப் போலவே இதுவும் கிராமிய கதைக்களம் என்று கூறப்படுகிறது.

மேலும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ‘அவன் இவன்’ உட்பட கிராமப் பின்னணி கொண்ட சில படங்களில் மட்டுமே ஆர்யா நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முத்தையா போன்ற கிராமத்தை மையமாக வைத்து உருவாகும் படமொன்றில் ஆர்யாவின் தோற்றம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Comments are closed.