சோதனையை சாதனையாக்கிய அஜித்! வாழ்வின் முக்கிய கட்டம் !!அஜித் குமார் பற்றி பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

9

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.

இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் ‘அமராவதி’யில் ஆரம்பித்து ‘காதல் மன்னன்’, ‘ஆசை’, ‘அமர்க்களம்’ என தொடர்ந்து ‘வலிமை’ வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது. மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாள். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இதோ உங்களுக்காக…

ak 61

சினிமாவில் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் நடிக்க வருவதற்கு முன்பு தன்னுடைய ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

shalini ajith

தமிழில் ‘அமராவதி’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அஜித்திற்கு பரவலான அறிமுகம் கொடுத்தது ‘ஆசை’ திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் இயக்குநர் வசந்த்திடம் அஜித்தை தேர்ந்தெடுத்தது குறித்து பேசிய போது, ‘அமராவதி’ படத்திற்கு முதலில் நடிகர் அஜித் என் தேர்வு கிடையாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த கதைக்கு அரவிந்த்சாமியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் அவரது தேதிகள் கிடைக்காததால் பெண்களுக்கு பிடித்தமான அழகான ஒரு கதாநாயகனை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ஒரு விளம்பரத்தில் அஜித்தை பார்த்ததும் அவரைப் பிடித்து நேரில் கதை கூறினர். அப்போதெல்லாம் அதிகம் பைக்கில் தான் வந்து போவார். படம் வெளியாகி இன்று வரைக்கும் அவருடைய சினிமா பயணத்தில் முக்கிய படமாக இருப்பது ‘ஆசை’ திரைப்படம்.

‘ஆசை’ நாயகனாக இருந்தவரை ‘காதல் மன்னன்’ ஆக அறிமுகப்படுத்தியது இயக்குநர் சரண் தான். ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என நடிகர் அஜித்தின் ஆரம்ப காலம் தொட்டே அவருடன் பயணித்து வந்தவர். ‘காதல் மன்னன்’ படம் வெளியான பிறகு அஜித்திற்கு முதுகுத்தண்டில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது என்னிடம், ‘அடுத்து ஒரு ஆக்ஷன் கதை சொன்னீர்களே, அதை தயார் செய்யுங்கள். விரைவில் நான் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்றார் அஜித். அந்தக் கதை தான் ‘அமர்க்களம்’. அஜித் எப்போதும் தன்னிடம் நெருக்கமாக பழகுபவர்களிடம் உண்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பவர்.

ak61

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

‘ஆசை’, ‘காதல் மன்னன்’ என சினிமாவின் ஆரம்ப காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்த அஜித்தை கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் பொருந்தி போக செய்தது ‘உல்லாசம்’ திரைப்படம் தான். இயக்குநர் ஜேடி இந்த படம் குறித்து பகிர்ந்த போது, “முதலில் இந்த கதை கேட்ட அனைவரும் அஜித்திற்கு இந்த கதாபாத்திரம் பொருந்தாது என்று தான் சொன்னார்கள். ஆனால், அவர் இதில் நடிக்க முழு ஈடுபாடு காட்டினார். இந்த படத்தினால் தான் பின்னாளில் ‘அமர்க்களம்’, ‘ரெட்’ போன்ற படங்களில் அவரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

ak valimai

இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் பிரியாணி செய்து தருவார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த சமயத்தில் எங்களுக்கு மீன் குழம்பு வைத்து கொடுத்திருக்கிறார். ‘உல்லாசம்’ படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக வெளிநாடு சென்றிருந்த போது முதன் முறையாக அவரது அம்மா அப்பாவையும் அழைத்து வந்திருந்தார் அஜித். படப்பிடிப்பு தளத்தில் எல்லாரிடமும் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வார்”

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஹெச். வினோத்துடன் தனது 61வது படத்தில் இணைந்திருக்கிறார் அஜித். ‘அஜித் எப்போதும் இயக்குநர்களுக்கு தன்னை ஒப்படைத்தது விடுவார். கதையில் எந்த குறுக்கீடும் செய்ய மாட்டார். அந்த நம்பிக்கை தான் அவரை வைத்து திரைக்கதையை என் விருப்பபடி அவருக்கு ஏற்றாற் போல செய்ய முடிந்தது” என புன்னகைக்கிறார் வினோத். அஜித்துடனான இவரது அடுத்த படத்திற்கு படப்பிடிப்பு தீவிரமாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்திற்கு கார், பைக் ரேசிங், விமானம், புகைப்படக்கலை இவற்றில் எல்லாம் ஆர்வம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு மினியேச்சர் ஹெல்மெட், நாணயங்கள் மற்றும் விதவிதமான தபால் தலைகள் சேகரிப்பது, புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.

படிப்பு நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கியம். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். பின்னாளில் படிக்காமல் போய் விட்டேன் என பல முறை வருத்தப்பட்டது உண்டு. தன்மானம் மிக முக்கியம். நீங்கள் விரும்பிய வேலையை முழு மூச்சாக செய்யுங்கள்’ என்பது தான் தன் ரசிகர்களுக்கு அஜித் கொடுக்கும் ‘ஆல்டைம் அட்வைஸ்’.

ak valimai

நடிகர் அஜித் சமீபத்தில் தன்னை ‘தல’ என்ற அடைமொழியோடு இனி அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘தீனா’ படத்தில் நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான ‘மகாநதி’ சங்கர் தான் அஜித்தை ‘தல’ என்று அழைப்பார். அதற்கு பிறகே அவருக்கு ‘அந்த அடைமொழி’ பிற படங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டது.

ajith

‘வாழு, வாழ விடு’ என்பதை எப்போதும் கடைப்பிடிப்பார் அஜித். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். பட வேலைகள், அது குறித்த அறிவிப்பு ஆகியவற்றை நல்ல நேரம் பார்த்தே தொடங்குவார். பெரும்பாலும் அவரது படங்கள் குறித்த எந்த விதமான அறிவிப்பும் வியாழக்கிழமை வெளிவருவது வழக்கம்.

Comments are closed.