தனியார் நிறுவனத்துடன் கைகோர்க்க போகும் அஜித் !! வெளியான மாஸ் அப்டேட் இதோ !!

15

அஜித்குமார் இன்று மே 1ஆம் தேதி தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சூப்பர் ஸ்டார் ஒரு தனித்துவமான வாழ்க்கையைக் கொண்ட நடிகருக்கு உதாரணம். AK திரைப்படங்களில் அவரது பன்முகத் திறமைக்காக மட்டும் பாராட்டப்படாமல், நிஜ வாழ்க்கையில் அவரது மாறுபட்ட பொழுதுபோக்குகளுக்காகவும் பிரபலமானவர்.

அந்த வகையில் கடைசியாக வெளியான இவரின் வலிமை திரைப்படம்உலகமுழுவதும் ரூ.200 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதற்கிடையே தற்போது அஜித்தின் புதிய கூட்டணி குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி தற்போது அஜித்தின் அடுத்த படங்களில் ஒன்றை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அப்படி இந்த கூட்டணி அமைந்தால் முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்க இருக்கிறது சன் பிக்சர்ஸ்.

இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது வந்ததியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இதற்கிடையில், சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், அஜீத் குமாருடன் தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய சிறுத்தை சிவா, ‘AK63’ படத்தை இயக்கத் தயாராக இருக்கிறார், மேலும் தயாரிப்பு சன் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத்தும் சிவாவும் தங்களின் நான்காவது படத்திற்காக மீண்டும் இணைவார்களா? இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்போம்.

Comments are closed.